தேவையான பொருட்கள்:
வட்டமாக நறுக்கப்பட்ட வண்ணத்தாள்கள்
கோந்து
பால் குத்த பயன்படும் சிறு குச்சிகள்
கத்திரிகோல்
செய்முறை:
வட்டமாக நறுக்கப்பட்ட வண்ணத்தாள்களை சரி பாதியாக மடித்து கொண்டு அரைவட்ட வடிவத்துக்கு நறுக்கி கொள்ளவும்.
அரைவட்ட வடிவமாக நறுக்கப்பட்ட வண்ணத்தாள்களை சரிபாதியாக மடித்து கத்திரிகோல் கொண்டு சிறிய வளைவுகள் வரும்படி பிறை வடிவத்தில் நறுக்கி கொள்ளவும், இது குடையில் வளைவுகள் இருப்பது போல் காட்சி தரும்.
இப்போது நறுக்கப்பட்ட வண்ணத்தாள்களை ஒன்றுடன் ஒன்று சேர்த்து கோந்து கொண்டு ஒட்டவும்.
ஒட்டப்பட்ட வண்ணத்தாள்களின் மையப்பகுதியில் சிறு குச்சியை கோந்து கொண்டு ஓட்ட வைக்கவும்.
வண்ணத்தாள்களை பிரித்து விட்டால் அழகான பேப்பர் குடை தயார்.