Monday 9 October 2017

இளம் சாதனையாளர் விசாலினி


நெல்லையை சேர்ந்த பதினைந்து வயதான விசாலினி என்ற தமிழ் மாணவி நுண்ணறிவு திறன் சோதனையில் (IQ) 225 புள்ளிகளை பெற்று உலகிலேயே மிக அதிக  நுண்ணறிவு திறன் கொண்டவர் என்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை இவர் படைத்த போது இவருக்கு வயது பதினொன்று மட்டுமே, இவரது தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரீசியானாக பணிபுரிகிறார், தாயார் அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராக பணிபுரிகிறார். சிறு வயதிலேயே இவர் செய்த சாதனைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாமா... 

இவரது சாதனை பட்டியல்:
அதிகபட்ச IQ 225 (செப்டம்பர் 2009), சிறு வயதிலேயே CCNA சான்றிதழ் வைத்திருப்பவர் (11 வயதில்), சிறு வயதிலேயே மைக்ரோசாப்ட் நிபுணர் சான்றிதழ் பெற்றவர் (11 வயதில்) சிறு வயதிலேயே ஆரக்கிள் சான்றிதழ் பெற்றவர் (13 வயதில்), கணினி உலகையை அச்சுறுத்திய வைரஸுக்கு தீர்வு கண்டுபிடிக்க மத்திய அரசு இவரது உதவியை நாடியது,  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கூட்டத்தில் உரையாற்றும்படி அழைக்கப்பட்டவர் என்று இவரது சாதனைகளை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம்.

இவர் பெற்றுள்ள விருதுகள் பட்டியல்:
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை (இந்தியா) மூலம் இன்ஸ்பயர் விருது பெற்றுள்ளார், HCL டெக்னாலஜீஸ் நிறுவனம் இவருக்கு (The Pride of India) இந்தியாவின் பெருமை என்ற விருதை அளித்து பெருமைபடுத்தியுள்ளது, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் இவருக்கு  இளம் சாதனையாளர் விருது என்ற விருதை அளித்து பெருமைபடுத்தியுள்ளது. 
இவரது சாதனைகளை பற்றிய காணொளி காட்சி:
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்