Monday 15 January 2018

13 வயதில் 3டி பிரிண்டர் உருவாக்கி அசத்திய அங்கத் தர்யானி




மும்பை மாநகரை சேர்ந்த அங்கத் தர்யானி ஒன்பதாம் வகுப்போடு பள்ளி சென்று கல்வி கற்பதை நிறுத்தி விட்டு வீட்டில் தனியே ஆசிரியரை கொண்டு கல்வி கற்க தொடங்கியவர்.... பள்ளியில் பாடங்களை மனப்பாடம் செய்து அதை தாளில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதை விட நிஜத்தில் செயால் முறை மூலமாக கல்வி கற்று கொண்டு அறிவை வளர்த்து கொள்ள விரும்பியதால் பள்ளி படிப்பை நிறுத்தியதாக கூறுகிறார் அங்கத் தர்யானி, சிறு வயதில் பொறியாளரான தனது தந்தையின் தொழிற்சாலையில் வல்லுனர்கள் சூரிய சக்தி மூலம் இயங்கும் பொருட்களில் மின்னணு தகடுகளில் சிப் பொருத்துவதை பார்த்த தர்யானிக்கு தொழில்நுட்ப துறையில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தன்னை ஒரு மேக்கர் (பொருட்களை உருவாக்குபவர்) என்று அறிமுகப்படுத்தி கொள்ளும் அங்கத் தர்யானியின் கண்டுபிடிப்புகள், உருவாக்கியுள்ள பொருட்கள் பல விஞ்ஞானிகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது, அவரது சாதனைகளின் சில துளிகள்:      

* சிறு வயதிலேயே சூரிய ஒளி மூலம் இயங்ககூடிய மினியேச்சர் படகு மற்றும் மினியேச்சர் தோட்ட பராமரிப்பு சாதனம் போன்றவற்றை உருவாக்கியுள்ளார்.   

* தன் 13 வது வயதில் இந்தியாவில் முதல் விலை குறைந்த 3டி பிரிண்டர் உருவாக்கியுள்ளார். 

* 2013 ஆம் ஆண்டில் எம்ஐடியின் ஆதரவோடு  பார்வை இழந்தவர்கள் பயன்படுத்தகூடிய ஐ-பாட் உருவாக்கப்பட்டது.

* உடலில் அணிந்து கொள்ள கூடிய  ECT இதய துடிப்பு மானிட்டர் உள்ளிட்ட இன்னும் பல திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

* ஷேர்கிட் என்ற குழந்தைகளுக்கான மலிவான விலையில் (Do It Yourself) டி.ஐ. யூ கிட்களை விற்க தனது சொந்த  நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். 

* சாதாரண மக்களும் பயன்படுத்தகூடிய வகையில் டெக் பொருட்களை மிக  குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும் என்பதை தன்  லட்சியமாக கொண்டு தொடர்ந்து  செயல்பட்டு வருகிறார் அங்கத் தர்யானி.

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்