1. டைம் டேபிள் - Time Table
ஒரு வாரத்திற்கு அல்லது மூன்றிலிருந்து, நான்கு வாரங்களுக்கு எந்த நேரத்தில் என்ன பாட வகுப்பு பள்ளி/கல்லூரியில் நடக்கும் என்பதை குறித்து வைத்து கொள்ள உதவும் ஆப் இது, இந்த ஆப்பில் விடுமுறை தினங்கள், தேர்வு நாட்கள், படிக்கும் நேரம், வீட்டு பாடம் செய்யும் நேரம் என்று சரியாக திட்டமிட்டு சேமித்து வைத்து கொண்டால் எப்போது வேண்டுமானாலும் எடுத்து பார்த்து கொள்ளலாம். நீங்கள் வகுப்பு நடக்கும் நேரத்தில் ஸ்மார்ட் போனை சைலன்ட் மோடில் வைக்க மறந்தாலும் இந்த ஆப் தானாகவே வகுப்பு நேரத்தில் போனை சைலன்ட் மோடில் வைத்து விடும்.
கூகுள் ப்ளேஸ்டோரில் ஆப் தரவிறக்கம் செய்ய இணைப்பு: இங்கு சொடுக்கவும்
2. மைஸ்க்ரிப்ட் கால்குலேட்டர் - MyScript Calculator
ஸ்மார்ட் போனில் உள்ள சாதாரண கால்குலேட்டரில் ஸ்க்ரீனில் உள்ள தொடுதிரை விசைபலகையை உபயோகித்து கணக்கு போடுவது சிரமம், அனால் இந்த மைஸ்க்ரிப்ட் கால்குலேட்டர் ஆப்பில் நீங்கள் ஸ்மார்ட்போன் தொடுதிரையில் எண்களையும் (கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்...) குறிகளையும் விரலால் வரைந்தாலே போதும், இந்த ஆப் அதை டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றி விடைகளை தருகிறது.
கூகுள் ப்ளேஸ்டோரில் ஆப் தரவிறக்கம் செய்ய இணைப்பு:
இங்கு சொடுக்கவும்
3. கோர்செரா - Coursera
உலக அளவில் புகழ் பெற்ற கல்லூரிகள், பல்கலைகழகங்களில் உள்ள ஆயிரகணக்கான துறைகள் (கணக்கு, மருத்துவம், இசை...) சம்பந்தப்பட்ட பாடங்களை ஒரே இடத்தில படிக்க வசதி செய்து தருகிறது இந்த ஆப். வீட்டிலிருந்தபடியே உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் உங்களுக்கு பிடித்த துறையில் நீங்கள் வல்லுநர் ஆக உதவும் ஆப் இது.
கூகுள் ப்ளேஸ்டோரில் ஆப் தரவிறக்கம் செய்ய இணைப்பு: இங்கு சொடுக்கவும்
4. டுவோலிங்கோ - Duolingo
பல மொழிகளை எளிய முறையில் விளையாட்டு போல் கற்று தரும் ஆப் இது. சொற்களை எந்த மொழியில் எப்படி உச்சரிப்பது, படங்கள் மூலம் சரியான வார்த்தையை தேர்வு செய்ய வைப்பது என்று மிக எளிமையாக சர்வதேச மொழிகளை இந்த ஆப் மூலம் கற்று கொள்ளலாம்.
கூகுள் ப்ளேஸ்டோரில் ஆப் தரவிறக்கம் செய்ய இணைப்பு: இங்கு சொடுக்கவும்
5. ஸ்குவிட் - Squid
முக்கியமான நேரங்களில் நோட்ஸ் எடுக்க குறிப்பு புத்தகமோ, பேனாவோ கையில் இல்லையா, உங்கள் ஸ்மார்ட்போனில் ஸ்குவிட் ஆப் இருந்தால் போதும். இந்த ஆப்பில் குறிப்புகள் எழுதலாம், படங்கள் வரையலாம், புகைப்படத்தை இணைத்தும் குறிப்புகள் எழுதி சேமித்து வைத்து கொள்ளலாம்.
கூகுள் ப்ளேஸ்டோரில் ஆப் தரவிறக்கம் செய்ய இணைப்பு: இங்கு சொடுக்கவும்
முந்தைய பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------