Monday, 27 November 2017

ஏழு வயதில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவ மேதை

க்ரித் ஜெய்ஸ்வால், பத்து மாத குழந்தையாக இருக்கும் போதே நடக்கவும் பேசவும் துவங்கியவுடன் பெற்றோருக்கு ஆச்சரியம், ஆனால் அப்போது இந்த குழந்தை இன்னும் பல ஆச்சரியங்களை தங்களுக்கும் உலகத்துக்கும் தர போகிறான் என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

1993ஆம் வருடம் ஏப்ரல்   மாதம் 23 ஆம் தேதி   ஹிமாச்சல்    மாநிலத்தில்,    இமயமலை அடிவாரத்தில் இருக்கும் நுர்பூர் என்ற நகரத்தில் அக்ரித் ஜெய்ஸ்வால் பிறந்தார், இவர் ஐந்து வயதில் ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய நூல்களையும், மருத்துவ துறை சார்ந்த நூல்களையும் படிக்க துவங்கியது அடுத்த ஆச்சரியம். இவருக்கு ஆறு வயதான போது மருத்துவ துறையில் இவரது அறிவுத்திறனை கண்ட மருத்துவர்கள் சிலர் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது இவரையும் கூட இருந்து சிகிச்சை முறைகளை பார்க்க அனுமதித்துள்ளனர். 


(19 நவம்பர் 2000) அன்று, தனது ஏழாவது வயதில், அந்த நகரத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள போதிய பொருளாதார வசதி இல்லாததால் ஐந்து வருடங்களாக, நெருப்பு காயத்தால் பாதிக்கப்பட்டு ஒட்டிக்கொண்ட விரல்கள் பிரித்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் தன்னிடம் வந்த ஒரு எட்டு வயது சிறுமிக்கு (மருத்துவ படிப்பு இல்லாமல் மருத்துவராக தேர்ச்சி பெறாத நிலையில்) வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அதன் மூலம் எந்த பாதிப்புமின்றி அந்த சிறுமியின் விரல்களை பிரித்தெடுத்து உள்ளான். அறுவை சிகிச்சை குறித்து தான் படித்த மருத்துவ நூல்கள் கொடுத்த அறிவையும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் போது அருகிலிருந்து கவனித்ததையும் வைத்து கொண்டே இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.   


அக்ரித்  ஒப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது - புகைப்படம் 

தனது பனிரெண்டாவது வயதில் அக்ரித் சண்டிகர் கல்லூரி ஒன்றில் மருத்துவ பட்டப்படிப்பு படிக்க துவங்கி உள்ளார். தற்போது,   13   வயதாகும்   அக்ரித்த்தின் (IQ)   நுண்ணறிவு    திறன் 146     புள்ளிகள்,       கேன்சர்        வியாதிக்கு      மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில்   ஈடுபட்டிருக்கிறார்.   இவ்வளவு சிறு   வயதில் மருத்துவம் படித்து கொண்டிருக்கும்  இவரை பற்றி  கேள்விப்பட்ட லண்டனின் இம்பீரியல்    பல்கலைகழகத்தின்   உள்ள   விஞ்ஞானிகள்    மற்றும் ஆராய்ச்சி குழுவினர்     இவரை     தங்கள்    பல்கலைகழகத்துக்கு   அழைத்து     இவரது அறிவுத்திறனை சோதித்து  பாராட்டியுள்ளனர். 

இப்போது அக்ரித் கான்பூரில் உள்ள புகழ்பெற்ற ஐஐடி-யில் பயோ இன்ஜினியரிங் படித்து வருகிறார்.  
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்