Monday 18 November 2019

டூடுல் ஃபார் கூகுள் - பரிசை வென்ற ஏழு வயது மாணவி


கூகுள் ஃபார் டூடுல் போட்டியில் பரிசை வென்ற ஏழு வயது மாணவி திவ்யான்ஷி சிங்கால்.


டூடுல் ஃபார்  கூகுள் என்ற பெயரில் கூகுள் நிறுவனம் நடத்திய ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான டூடுல் ஓவியம் வரையும் போட்டியில் குருகிராம் பகுதியை சேர்ந்த டெல்லி பப்ளிக் ஸ்கூலில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது மாணவியான திவ்யான்ஷி சிங்கால் தேசிய அளவில் முதல் பரிசை வென்றுள்ளார்.

வாக்கிங் டிரீஸ், அதாவது தமிழில் நடக்கும் மரங்கள் என்ற தலைப்பில் அவர் வரைந்த டூடுல் ஓவியத்திற்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. கோடை விடுமுறைக்கு தனது பாட்டியின் இல்லத்திற்கு சென்ற போது அங்கு அருகில் இருந்த பகுதியிலுள்ள மரங்கள் வெட்டப்படுவதை கண்டு வேதனையடைந்த  திவ்யான்ஷி சிங்காலுக்கு ஒருவேளை இந்த  மரங்களுக்கு கால்கள் இருந்தால் அவைகள் ஓடிப்போய் தப்பித்துக் கொள்ளும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது. அந்த எண்ணத்தையே டுடுல் போட்டிக்கு ஓவியமாக வரைந்து பரிசை வென்றுள்ளார். 

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் கடந்த நவம்பர் பதினாலாம் தேதி குழந்தைகள் தினத்தன்று  காற்று மாசு அதிகரித்ததன்  காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது இந்த காற்று மாசு அதிகரிப்புக்கு  காரணம் அதிக அளவில் மரங்கள் வெட்டப்படுவது தான் என்று இந்த சிறுமி சுட்டிக்காட்டுகிறார்.  ஒரு லட்சத்துக்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் இவர் பரிசை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 23 April 2018

இந்தியாவில் உள்ள மிக சிறந்த பத்து கல்வி நிறுவனங்கள் - 2018


ந்தியாவில் உள்ள மிக சிறந்த பத்து கல்வி நிறுவனங்களின் பட்டியல் (2018) காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மாணவர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மாணவர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள்.

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Sunday 18 March 2018

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை விளக்கி $400,000 வென்ற பிலிப்பைன்ஸ் மாணவி


பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 18 வயதான ஹில்லாரி டியான் ஆண்டேல்ஸ் என்ற கல்லூரி மாணவி உலகப்புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை மிக எளிய முறையில் மூன்று நிமிட காணொளி காட்சி மூலம் விளக்கி $400,000  மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுளை வென்றுள்ளார், செய்தி  காணொளி காட்சி வடிவில் உள்ளது காணொளி காட்சி பிடித்திருந்தால் மாணவர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மாணவர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள்

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 5 March 2018

பொது அறிவு திறனில் அசத்தும் கூகுள் பாய் கவுடில்யா பண்டிட்


2013 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஆறு வயது சிறுவனான கவுடில்யா பண்டிட் தன்னிடம் கேட்கப்பட்ட பொது  அறிவு கேள்விகளுக்கு எல்லாம் சளைக்காமல் சில நொடிகளில் சரியான பதில்களை தொடர்ந்து சொல்லி கொண்டே வர அவரை பேட்டி எடுத்த செய்தியாளர் அசந்து போனார். செய்தி காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மாணவர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மாணவர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள்.  

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 20 February 2018

மாடிப்படிகளிலும் பயன்படும் நவீன வாக்கர் கருவி பள்ளி மாணவியின் கண்டுபிடிப்பு


2011 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷாலினிகுமாரியின் தாத்தா ஒரு விபத்தை சந்தித்ததால் வாக்கர் பயன்படுத்தி நடக்க துவங்கி இருக்கிறார். அப்போது ஷாலினிகுமாரிக்கு 12 வயது... செய்தியின் தொடர்ச்சி  காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மாணவர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மாணவர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 



--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 12 February 2018

தீயிலிருந்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிய நான்கு வயது சிறுமி -உண்மை சம்பவம்


மெரிக்க நாட்டில் உள்ள  இடாஹோ மாநிலத்தின் தலைநகரான போய்ஸ் நகரில் வசிக்கும் சியான் மோரனின் மகளான ரோசி என்ற நான்கு வயது சிறுமி தன தந்தையின் உதவியுடன் ஒரு குடும்பத்தை விழுங்க இருந்த பெரும் தீ விபத்தில் இருந்து அந்த குடும்பத்தை காப்பற்றி இருக்கிறாள். 


சியான் மோரன் தன் இரண்டு மகள்களை அழைத்து கொண்டு மாலை நேரத்தில் அவர்கள் குடியிருக்கும் தெருவுக்கு அருகில் சென்று இருக்கிறார், அவரது நான்கு வயது மகள் ரோசி தெருவை ஒரு சுற்று சுற்றி வரலாம் என்று நினைத்து தன் சைக்கிளில் பயணித்த போது ஒரு வீட்டின் பின்புறத்தில் நெருப்பு பற்றி எரிவதை பார்த்து, விரைந்து வந்து  அதை தன் தந்தையிடம் தெரிவித்து இருக்கிறாள், மகள் சொல்லியதை கேட்டு அதிர்ச்சியடைந்த சியன் மோரன் அங்கு சென்று பார்த்த போது ஒரு வீட்டின் பின்புறத்தில் கரும்புகையுடன் நெருப்பு பற்றி எரிய தொடங்கி இருந்திருக்கிறது, உடனே அவர் உங்கள் வீடு பற்றி எரிகிறது என்று கூச்சலிட்டு வெளியிலிருந்து அலறி இருக்கிறார், அவரது கூச்சல் சத்தம் கேட்டு வீடு தீப்பிடித்து எரிவதை அறியாமல் உள்ளே வீட்டுக்குள் இருந்த எர்னி ஆர்டிஸ் வெளியில் ஓடி வந்துள்ளார்.


காணொளி காட்சி: USA TODAY

வெளியில் வந்து தன் வீடு தீ பற்றி எரிவதை பார்த்த எர்னி ஆர்டிஸ் மீண்டும் வீட்டுக்குள் ஓடி சென்று அவரது மனைவி மற்றும் மகள்களை வெளியே அழைத்து வந்துள்ளார். அதற்குள் சியான் மோரன் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் குழாயிலிருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பற்றி எரிந்த தீயை அணைக்க முயல, தீ பற்றி எரியும் தகவலறிந்து தீயணைப்பு துறையினரும் வந்து தீயை அணைக்க, சில நிமிடங்களில் பெரும் தீ விபத்தில் இருந்து அந்த வீடும் வீட்டில் வசித்த ஒரு குடும்பமும் காப்பாற்றப்பட்டது.

இந்த சிறு வயதில் எர்னியின் குடும்பத்தை காப்பற்றிய சிறுமி ஜோசியை அந்த மாநிலமே வியப்புடன் பாராட்டுகிறது. 

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 5 February 2018

பதிமூன்று வயதில் கூகுள் நிறுவனத்தில் கால் பதிக்கும் - தன்மே பக்க்ஷி


னடா நாட்டில் உள்ள பிராம்ப்டன் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தன்மே பக்க்ஷி தன ஐந்தாவது வயதில் கணிணியில் புரோக்ராம்மிங் மொழிகளை கற்று கொண்டு புரோக்ராம்மிங் கோட்களை ஸ்விப்ட், விபி, ஜாவா, சி# போன்ற கணிணி மொழிகளில் எழுத துவங்கினார். ஐபோனில் இவர் தனது முதலாவது (ஆப்) செயலியான டிடேபிள்ஸ் தயாரித்து வெளியிட்ட போது அவருடைய வயது ஒன்பது. யூ டியூப் காணொளி காட்சி தளத்தில் இவர் நடத்தும்  கணிணியில்  புரோக்ராம்மிங் தொடர்பான பாடங்களை  காணொளி காட்சியாக பார்க்க இருபதாயிரம் பேருக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். மிக இளம் வயதில் ஐபிஎம் வாட்சன் புரோகிராம்மர் ஆக உயர்ந்தார்  தன்மே பக்ஷி. (ஐபிஎம் வாட்சன் என்பது கேள்விகளுக்கு விடை தரக்கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவு இயந்திரம்)


கணினியில் புரோகிராம்மிங் கோட்கள் எழுதுவதை ஒரு வேலையாகவே தான் நினைக்கவில்லை அதை ஒரு சாதாரண விளையாட்டாகவே நினைப்பதாக சொல்கிறார் தன்மே பக்ஷி. தன்மே பக்ஷியின் தந்தை புனீத் ஒரு கணிணி புரோகிராம்மர் ஆக வேலை பார்த்து வருபவர், அதனால் தன்மே பக்ஷியின் கணிணி அர்வத்தை புரிந்து கொண்டு அவரது தந்தை ஊக்கமளித்து அவரை கணிணி மொழிகளை கற்க உதவியுள்ளார். இப்போது, தன்மே பக்ஷி தன் பதிமூன்றாவது வயதில், உலக புகழ் பெற்ற தேடுதல் எந்திரமாக விளங்கும் கூகுள் நிறுவனத்தில் 1.25 மில்லியன் சம்பளத்தில் பணியில் சேர இருப்பது குறிப்பிடத்தக்கது.

தன்மே பக்க்ஷியின் பேட்டி
--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்