Monday, 18 December 2017

செய்து பாருங்கள்: கிறிஸ்துமஸ் பேப்பர் ஸ்டார்



தேவையான பொருட்கள்:
சார்ட் பேப்பர், வண்ண வண்ண டிசைன்களுடன் பரிசுபொருட்கள் சுற்றும் பேப்பர், செலஃபன் பேப்பர்
ஸ்கேல், பென்சில், ப்ரோட்ராக்டர்
கத்திரிகோல்
கோந்து
கலர் ரிப்பன்

செய்முறை: 
முதலில் சார்ட் பேப்பரில் பேப்பர் ஓரத்திலிருந்து 1 செ.மீ இடைவெளி விட்டு 15 செ.மீ நீளத்துக்கு ஸ்கேல் வைத்து ஒரு நேர்கோடு வரைந்து கொள்ளவும், அந்த நேர்கோட்டில் ப்ரோட்ராக்டர் வைத்து 21 டிகிரி இடைவெளி விட்டு தொடந்து புள்ளிகள் குறித்து கொள்ளவும், நேர்கோட்டின் ஆரம்பப்புள்ளியில் இருந்து குறித்த புள்ளிகளை நோக்கி 20 செ.மீக்கும் 15 செ.மீக்கும் கோடுகளை அடுத்தடுத்து வரையவும். வரையப்பட்ட கோடுகளின் முனைகளை கோடுகள் வரைந்து இணைக்கவும், இப்போது வரையப்பட்ட கோடுகளை ஒட்டி ஒரு செ.மீ இடைவெளி விட்டு புள்ளி கோடுகளை வரையவும். 



வரையப்பட்ட புள்ளி கோடுகளை ஒட்டி கத்திரிக்கோல் கொண்டு சார்ட் பேப்பரை நறுக்கி கொள்ளவும்.  இப்போது சார்ட் பேப்பரின் மறுபக்கத்தில் பரிசுபொருட்கள் சுற்றும் பேப்பரை கோந்து கொண்டு ஒட்டவும், பின்னர் பரிசுபொருட்கள் சுற்றும் பேப்பரையும் ஏற்கெனவே அளவாக வெட்டப்பட்ட சார்ட் பேப்பரின் அளவுக்கு கத்திரிக்கோல் கொண்டு நறுக்கி கொள்ளவும்.

கோடுகள் வரையப்பட்ட சார்ட் பேப்பரின் ஒரு முக்கோண பகுதியில் மட்டும் சின்ன சின்ன ஸ்டார் வடிவங்களை வரைந்து பின் அந்த வடிவங்களை வெட்டி எடுத்து விடவும். அந்த முக்கோண பகுதியில் வண்ண செலஃபன் பேப்பரை ஒட்டி விடவும். 



சார்ட் பேப்பரின் ஓரங்களை ஒட்டி (ஓரத்திலிருந்து 1 செ.மீ இடைவெளி விட்டு) மடித்து கொள்ளவும். வெட்டப்பட்ட சார்ட் பேப்பரின் இரு புறங்களின் ஓரங்களையும் கோந்து கொண்டு ஒட்டவும். இப்போது அழகிய  கோன் வடிவம் தயாராகி விட்டது. இதே முறையில் ஐந்து கோன்களை தயாரித்து அவற்றை ஒன்றுடன் ஒன்று சேர்த்து ஒட்டி கொள்ளவும். சிறிது நேரம் காய வைத்து பின்னர் கோன்களை விரித்தால் அழகிய பேப்பர் ஸ்டார் தயார். 
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்