Monday 29 January 2018

தாய் தந்தையை இழந்த பத்து வயது சிறுமியின் அசாதாரண வாழ்க்கை


சீனாவில் உள்ள நான்டாங் என்ற சிறிய கிராமத்தில் வசித்து வரும் பத்து வயதாகும் சியோ யிங் இந்த சிறு வயதிலேயே, சில வருடங்களுக்கு முன், தன் தந்தையை கான்சர் வியாதிக்கு பறி கொடுத்து விட்டாள்.

 (தொடர்ந்து   வாசிக்க   விரும்பினால்  வாசிக்கவும், சியோ   யிங்    வாழ்கையை காணொளி    காட்சி   வடிவில்   பார்க்க   விரும்புபவர்கள்    கீழே   உள்ள    (யூ டியூப்)  காணொளி காட்சியை பார்க்கவும்.    






கணவனை இழந்த பின் பிள்ளைகளை பொறுப்போடு கவனித்து கொள்ள வேண்டிய அவர்களின் தாயோ, பிள்ளைகளை சுமையாக கருதி அவர்களை விட்டு பிரிந்து சென்று விட இப்பொழுது தன் இரண்டு தம்பிகளையும் கவனித்து கொள்ளும் தாயும் தந்தையுமாக மாறி இருக்கிறாள் சியோ யிங். 


சிறு வயதில் தன் நண்பர்களோடு விளையாடுவது, பொழுது போக்குவது, பள்ளி சென்று கல்வி கற்பது போன்ற இயல்பான விஷயங்களை எல்லாம் மறந்து விட்டு, அதிகாலையில் எழுந்து தன் தம்பிகளுக்கு உணவு சமைத்து கொடுப்பதில் துவங்கி, அவர்களை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்வது,



 வீட்டு வேலைக்கு தண்ணீர் எடுத்து வருவது, அழுக்கு துணிகளை துவைப்பது, வீட்டு வேலைகளை பார்ப்பது, பின்பு மாலையில் பள்ளி முடிந்ததும் தம்பிகளை வீட்டுக்கு அழைத்து வருவது, அவர்களுக்கு பள்ளி பாடங்களை படிக்க உதவுவது என்று ஒவ்வொரு நாளும் தாயும், தந்தையுமாக இருந்து அவர்களை கவனித்து கொள்கிறாள்.



இவர்களை அருகில் இருந்து கவனித்து கொள்ளும் ஒரே சொந்தம் இவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் குடியிருக்கும் இவர்களது மாமா, அவர் சியோ தன் சகோதரர்களை வளர்க்க படும் பாடுகளை பார்த்து சியோவின் தம்பிகளை யாருக்காவது தத்து கொடுத்து விட முயன்றிருக்கிறார், ஆனால் தன் சகோதரர்களை தத்து கொடுக்க சியோ சம்மதிக்க மறுத்து விட்டாள், அவர்களை தானே வளர்த்து கொள்வதாக கூறி இருக்கிறாள்.



சிறு வயதில் வீட்டு வேலைகளை பார்த்து கொள்வதோடு, பள்ளியில் நன்றாக படித்து, நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளியிலும் சிறந்த மாணவியாக விளங்குவது ஆச்சரியம்.



 சியோவின் சிரமம் மிகுந்த வாழ்க்கை பற்றி தெரிந்து கொண்ட இவரது பள்ளி ஆசிரியர்கள் அவள் எதிர்காலம் கருதி ஒரு நன்கொடை திட்டத்தை பள்ளியில் நடத்தி, அதன் மூலம் ஏராளமான நல்ல உள்ளம் கொண்ட மக்களிடம் நிதி பெற்று அதை சியோவின் அன்றாட தேவைகளை கவனித்து கொள்ள வழங்கி உள்ளனர்.  


சொந்தங்களை சுமையாக கருதும் மனிதர்கள் வாழும் இக்காலத்தில் இந்த சிறு வயதில், தன் சகோதர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கும் சியோவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அல்லவா? 


--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்