Monday 13 November 2017

பத்து வயதில் சதுரங்க போட்டியில் சர்வதேச மாஸ்டர் பட்டம் பெற்ற பிரக்னானந்தா

ம் இந்திய திருநாட்டில் கிரிக்கெட் விளையாட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற எந்த விளையாட்டுக்கும் கொடுக்கப்படுவதில்லை, மிகவும் இளம் வயதில் (பத்து வயது, பத்து மாதம்)  கடந்த 2016ஆம் ஆண்டு புவனேஸ்வரில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் வென்று சர்வதேச மாஸ்டர் பட்டம் பெற்ற சென்னையில் வசிக்கும் பிரக்னானந்தாவை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டால் பலர் தெரியாது என்ற பதிலையே சொல்வீர்கள்.  

பிரக்னானந்தா குடும்பத்துடன் பேட்டி


இந்த சிறுவனின் சகோதரி வைஷாலி அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிட்டதால் இவர்களது பெற்றோர் அவர் கவனத்தை திசை திருப்ப சதுரங்க விளையாட்டு பயற்சி வகுப்பில் சேர்த்துள்ளனர், தனது சகோதரி வீட்டில் சதுரங்கம் விளையாடுவதை பார்த்த பிரக்னானந்தாவுக்கும் சதுரங்கம் விளையாட்டில் ஆர்வம் வந்துள்ளது, உடன் சிறுவனையும் சதுரங்க விளையாட்டு பயற்சி வகுப்பில் பெற்றோர் சேர்த்து விட்டுள்ளனர். 

சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டம் பெற்ற பின் கொடுத்த பேட்டி


இவர்களது சதுரங்க பயற்சி நடைபெறும் இடம் வீட்டிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் இருந்தது, பேருந்திலோ, ஷேர் ஆட்டோவிலோ பயணம் செய்து தான் அங்கு செல்ல முடியும், சதுரங்கம் கற்று கொள்ளும் ஆர்வத்தினால் இவர்கள் தினமும் பயற்சி மையத்திற்கு பயணம் செய்து சதுரங்க விளையாட்டு பயற்சி பெற்று வந்துள்ளனர்.

 இவர்களுக்கு பயிற்சி தரும் ஆசிரியர் ரமேஷ்,  பிரக்னானந்தா பற்றி கூறும்போது பயிற்சிக்கு வரும் எல்லா மாணவர்களிடமும் நீங்கள் இன்றைக்கு சதுரங்க விளையாட்டில் என்ன கற்று கொள்ள விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை கேட்பது வழக்கம், பெரும்பாலும் சிறுவர்கள் தலையை சொரிந்து கொண்டு தெரியவில்லை என்ற பதிலையே சொல்வார்கள், ஆனால்  பிரக்னானந்தாவோ என் கேள்விக்கு சதுரங்கதில் உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ எல்லாவற்றையும் எனக்கு கற்று கொடுங்கள் என்று பதிலளித்தான். இதற்கு முன்பு யாரும் இப்படி ஒரு பதிலை சொன்னதில்லை. 

பயிற்சியின் போது பிரக்னானந்தா மிக வேகமாக சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களை கற்று கொள்வதுடன், அவனது அபாரமான ஞாபக திறனும் வியக்க வைக்கிறது என்கிறார் பயற்சியாளர் ரமேஷ்.  ஒவ்வொரு முறை விளையாடும் போதும் முன்பு விளையடியதைவிட இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தினமும் சதுரங்க விளையாட்டில் முன்னேறி வரும் பிரக்னானந்தா, வீட்டில் எல்லா சிறுவர்களையும் போலவே டிவியில் கார்ட்டூன் பார்த்து, விளையாடி நேரத்தை செலவிடும் பிரக்னானந்தாவுக்கு சோட்டா பீம், மைட்டி ராஜு,  டாம் & ஜெர்ரி  மிகவும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள். 
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்