Monday 30 October 2017

மாணவர்கள் இன்டர்நெட் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

ன்டர்நெட்டில் அல்லது கணினியை மாணவர்கள் பயன்படுத்தும்போது பெற்றோர், பள்ளியில் ஆசிரியர்களுடன் உடன் சேர்ந்து பயன்படுத்துவது நல்லது. 

முன் பின் அறிமுகமில்லாத நபர்களிடம் உங்கள் இருப்பிடம், படிக்கும் வகுப்பு,  பள்ளியின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை தராதீர்கள். மிக முக்கியமாக உங்கள் புகைப்படத்தை ஒருபோதும் அறிமுகமில்லாத நபர்களிடம் தராதீர்கள். (சமூக ஊடகங்களில் உங்கள் புகைப்படத்தை பகிரவும் செய்யாதீர்கள்) 

மின்னஞ்சல், சமூக ஊடகங்களில் அக்கவுண்ட் வைத்திருந்தால் அதன் (பாஸ்வர்ட்) கடவுச்சொல் கடினமானதாக வையுங்கள், உங்கள் அக்கவுண்டுக்கான கடவுச்சொல்லை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஒரு வேளை தவிர்க்க இயலாத காரணங்களால் கடவுசொல்லை யாரிடமாவது பகிர நேர்ந்தால், உடனடியாக அந்த கடவுசொல்லை மாற்றி விடவும். இது உங்கள் கணக்கை ஹாக்கர்களிடமிருந்து தப்புவிக்கும்.

அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களில் இருக்கும் கோப்புகளை தரவிறக்கம் செய்யாதீர்கள். மேலும் அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் இணைய முகவரி  லிங்குகளையும் க்ளிக் செய்யாதீர்கள். இது உங்கள் கணினியை வைரஸ் தாக்குதலிலிருந்து தப்புவிக்கும்.

உங்களுக்கு நேரடியாக அறிமுகமில்லாத நபர் சமூக ஊடகங்கள் மூலமாக உங்களோடு தொடர்பில் இருப்பவர் உங்களை நேரில் பார்க்க விரும்புவதாக சொன்னால் அந்த அழைப்பை  நிராகரியுங்கள். 

சமூக ஊடகங்களில் எந்த தனி நபருக்கு அல்லது நிறுவனத்துக்கு அல்லது இயக்கங்களுக்கு அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு விரோதமாக மனதை புண்படுத்தும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிடாதீர்கள். உங்களுக்கு ஒருவரின் செயல்பாடுகள் கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால் அவர் உங்களை தொடர்பு கொள்ள முடியாதபடி அவரை நீங்கள் பிளாக் செய்து விடலாம். 


--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்