Monday 12 February 2018

தீயிலிருந்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிய நான்கு வயது சிறுமி -உண்மை சம்பவம்


மெரிக்க நாட்டில் உள்ள  இடாஹோ மாநிலத்தின் தலைநகரான போய்ஸ் நகரில் வசிக்கும் சியான் மோரனின் மகளான ரோசி என்ற நான்கு வயது சிறுமி தன தந்தையின் உதவியுடன் ஒரு குடும்பத்தை விழுங்க இருந்த பெரும் தீ விபத்தில் இருந்து அந்த குடும்பத்தை காப்பற்றி இருக்கிறாள். 


சியான் மோரன் தன் இரண்டு மகள்களை அழைத்து கொண்டு மாலை நேரத்தில் அவர்கள் குடியிருக்கும் தெருவுக்கு அருகில் சென்று இருக்கிறார், அவரது நான்கு வயது மகள் ரோசி தெருவை ஒரு சுற்று சுற்றி வரலாம் என்று நினைத்து தன் சைக்கிளில் பயணித்த போது ஒரு வீட்டின் பின்புறத்தில் நெருப்பு பற்றி எரிவதை பார்த்து, விரைந்து வந்து  அதை தன் தந்தையிடம் தெரிவித்து இருக்கிறாள், மகள் சொல்லியதை கேட்டு அதிர்ச்சியடைந்த சியன் மோரன் அங்கு சென்று பார்த்த போது ஒரு வீட்டின் பின்புறத்தில் கரும்புகையுடன் நெருப்பு பற்றி எரிய தொடங்கி இருந்திருக்கிறது, உடனே அவர் உங்கள் வீடு பற்றி எரிகிறது என்று கூச்சலிட்டு வெளியிலிருந்து அலறி இருக்கிறார், அவரது கூச்சல் சத்தம் கேட்டு வீடு தீப்பிடித்து எரிவதை அறியாமல் உள்ளே வீட்டுக்குள் இருந்த எர்னி ஆர்டிஸ் வெளியில் ஓடி வந்துள்ளார்.


காணொளி காட்சி: USA TODAY

வெளியில் வந்து தன் வீடு தீ பற்றி எரிவதை பார்த்த எர்னி ஆர்டிஸ் மீண்டும் வீட்டுக்குள் ஓடி சென்று அவரது மனைவி மற்றும் மகள்களை வெளியே அழைத்து வந்துள்ளார். அதற்குள் சியான் மோரன் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் குழாயிலிருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பற்றி எரிந்த தீயை அணைக்க முயல, தீ பற்றி எரியும் தகவலறிந்து தீயணைப்பு துறையினரும் வந்து தீயை அணைக்க, சில நிமிடங்களில் பெரும் தீ விபத்தில் இருந்து அந்த வீடும் வீட்டில் வசித்த ஒரு குடும்பமும் காப்பாற்றப்பட்டது.

இந்த சிறு வயதில் எர்னியின் குடும்பத்தை காப்பற்றிய சிறுமி ஜோசியை அந்த மாநிலமே வியப்புடன் பாராட்டுகிறது. 

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்