Sunday 31 December 2017

ஒரு நாள் விமானியான ஆறு வயது சிறுவன் ஆடம்

ரு நாள் முதல்வர் பற்றி திரைப்படத்தில் பார்த்திருப்போம் ஒரு நாள் விமானியான ஆறு வயது சிறுவன் ஆடம் பற்றி தெரியுமா?



ஆறு வயதில் நாமெல்லாம் வானில் உயர பறக்கும் விமானத்தை பார்த்து ஆச்சரியபட்டிருப்போம், ஒரு சில வசதிமிக்க குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் விமானங்களில் பயணிக்கவும் செய்திருக்கலாம்,  ஆறு வயதில் விமானத்தை இயக்கும் ஆசை நம்மில் ஒருவருக்கும் வந்திருக்காது, ஆனால் ஆறு வயதில் சிறுவன் ஆடமுக்கு விமானத்தை இயக்கும் ஆசை வந்துள்ளது. 



ஒரு நாள் விமான பைலட் ஆக ஆசைப்பட்ட ஆடமின் ஆசையை எத்திஹாட்  விமான நிறுவனம் நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுவன் யு டியூப் இணையதளத்தில் விமானத்தை இயக்கும் காணொளி காட்சிகளை பார்த்து அதன் மூலம் விமானம் எப்படி இயக்கப்படுகிறது என்பதை மனப்பாடம் செய்துள்ளான், பின்னர் விமானத்தை இயக்கும் பைலட்களிடம் விமானம் எப்படி இயக்கபடுகிறது என்பதை விவரித்துள்ளான், சிறுவன் ஆடம் விமான பைலட்களிடம் பேசும் காணொளி காட்சி  யு டியூப்  தளத்தில் பதிவேற்றப்பட்டு வைரல் ஆனது. இந்த காணொளி காட்சியை பார்த்த எத்திஹாட் விமான நிறுவனம், விமான பைலட் ஆக ஆசைப்பட்ட ஆடம்மை தங்கள் விமான பயிற்சி நிறுவனத்துக்கு-விமான பைலட் பயிற்சிக்கு (ஒரு நாள் மட்டும்) அழைத்து சிறுவனின் ஆசையை நிறைவேற்றி உள்ளது. 


ஆடம் ஒரு நாள் விமான பைலட் பயிற்சிகென்று தைக்கபட்ட பிரத்யேக பைலட் சீருடையை அணிந்து கொண்டு ஏர்பஸ் ஏ 380 சிமுலேட்டர்  இயக்கும் பயிற்சியை பெற்றான். பயிற்சி பெற்ற பின் ஆடம் ஒரு தேர்ந்த பைலட் போல வீடியோ பயற்சி முறையில் விமானத்தை டேக் ஆப் செய்தும், லான்ட் செய்தும் காண்பித்து அசத்தியுள்ளான். 

விமானத்தின் கேப்டன் ஆவது தான் தன் லட்சியம் என்று கூறும் சிறுவன் ஆடம் சில வருடங்களில் நிச்சயம் தன் லட்சியத்தை அடைந்து விடுவான் என்று நம்பலாம். 
--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்