Monday 25 December 2017

மனித கால்குலேட்டர் - ப்ரியான்ஷி சோமனி

ணக்குகள் போட உதவும் மின்னணு கால்குலேட்டரை விட அதிவேகமாக கணக்குகள் போட்டு மனித கால்குலேட்டர் என்று பெயர் பெற்றுள்ளார் 11 வயது சிறுமி ப்ரியான்ஷி சோமனி. இவரது தந்தை சத்யன் சோமனி ஒரு தொழிலதிபர், தாய் அஞ்சு சோமனி குடும்பத்தலைவி. 1998 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி பிறந்த ப்ரியான்ஷி சோமனி தனது ஆறாவது வயதிலேயே கணக்கு பாடம் கற்பதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார், சிறு வயதிலேயே ஆபாரமான கணித திறன் பெற்றுள்ள இவர் கணித புதிர் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற துவங்கினார். அவர் லூர்தூஸ் கான்வென்ட் ஸ்கூல் ஆஃப் சூரட்டில் பள்ளி படிப்பை முடித்துள்ளார். 

வென்ற கோப்பைகளும், விருதுகளும்: 
கணித புதிர்களுக்கு இவர் வித்தியாசமான முறைகளை பயன்படுத்தி  அதிவேகமாக சில நிமிடங்களில் விடைகளை கண்டுபிடிக்கிறார், கடினமான கணித புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பது என்பது இவருக்கு எண்களோடு விளையாடுவது போன்றுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு, ஜெர்மனியில் மாக்ட்பேர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற (Mental Calculaton World Cup) மனக்கணக்குக்கான உலக கோப்பை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார், அந்த போட்டியில் கலந்து கொண்டவர்களிலேயே மிகவும் இளையவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

2008ஆம் ஆண்டு நடைபெற்ற கணிதத்துக்கான சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். லிம்கா உலக சாதனை புத்தகத்தில் சாதனையாளராக இவர் பெயர் இடம் பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் வர்க்க மூலம் கணக்குக்கு அதிவேகமாக விடை கண்டுபிடிப்பதில் உலக அளவில் சாதனைகள் செய்துள்ளார். நான்கு மனக்கணக்குக்கான உலகக் கோப்பை போட்டிகளில் இன்றுவரை கூட்டல், பெருக்கல் மற்றும் வர்க்க மூலம் கணக்கிடுவது ஆகியவற்றில் நூறு சதவிகிதம்  துல்லியமாக விடையளித்த  ஒரே ஒரு பங்கேற்பாளர் இவர் மட்டும் தான்.  



2010 ஆம் ஆண்டு நடந்த மனக்கணக்குக்கான உலகக் கோப்பை போட்டியில் தனக்கு கொடுக்கப்பட்ட பத்து கணக்குகளுக்கு சரியான விடைகளை (6 நிமிடங்கள் 28 நொடிகளில்) கண்டுபிடித்து சாதனை படைத்தார், இந்த சாதனையினால் அவர் 2012ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் நடைபெற்ற மெமரியாட் உலக கோப்பை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார், 3 ஜனவரி 2012 அன்று, மெமரியாட் போட்டிக்கான மென்பொருளைப் பயன்படுத்தி தனக்கு கொடுக்கப்பட்ட பத்து கணக்குகளுக்கான சரியான விடைகளை அவர் 2:43:05 நிமிடங்களில் கண்டுபிடித்து  முடித்து மெமரியாட் உலக கோப்பை போட்டியிலும் வெற்றி பெற்றார். அவரது சாதனை குறித்த காணொளி காட்சி உங்கள் பார்வைக்கு:

--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்