Monday 5 February 2018

பதிமூன்று வயதில் கூகுள் நிறுவனத்தில் கால் பதிக்கும் - தன்மே பக்க்ஷி


னடா நாட்டில் உள்ள பிராம்ப்டன் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தன்மே பக்க்ஷி தன ஐந்தாவது வயதில் கணிணியில் புரோக்ராம்மிங் மொழிகளை கற்று கொண்டு புரோக்ராம்மிங் கோட்களை ஸ்விப்ட், விபி, ஜாவா, சி# போன்ற கணிணி மொழிகளில் எழுத துவங்கினார். ஐபோனில் இவர் தனது முதலாவது (ஆப்) செயலியான டிடேபிள்ஸ் தயாரித்து வெளியிட்ட போது அவருடைய வயது ஒன்பது. யூ டியூப் காணொளி காட்சி தளத்தில் இவர் நடத்தும்  கணிணியில்  புரோக்ராம்மிங் தொடர்பான பாடங்களை  காணொளி காட்சியாக பார்க்க இருபதாயிரம் பேருக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். மிக இளம் வயதில் ஐபிஎம் வாட்சன் புரோகிராம்மர் ஆக உயர்ந்தார்  தன்மே பக்ஷி. (ஐபிஎம் வாட்சன் என்பது கேள்விகளுக்கு விடை தரக்கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவு இயந்திரம்)


கணினியில் புரோகிராம்மிங் கோட்கள் எழுதுவதை ஒரு வேலையாகவே தான் நினைக்கவில்லை அதை ஒரு சாதாரண விளையாட்டாகவே நினைப்பதாக சொல்கிறார் தன்மே பக்ஷி. தன்மே பக்ஷியின் தந்தை புனீத் ஒரு கணிணி புரோகிராம்மர் ஆக வேலை பார்த்து வருபவர், அதனால் தன்மே பக்ஷியின் கணிணி அர்வத்தை புரிந்து கொண்டு அவரது தந்தை ஊக்கமளித்து அவரை கணிணி மொழிகளை கற்க உதவியுள்ளார். இப்போது, தன்மே பக்ஷி தன் பதிமூன்றாவது வயதில், உலக புகழ் பெற்ற தேடுதல் எந்திரமாக விளங்கும் கூகுள் நிறுவனத்தில் 1.25 மில்லியன் சம்பளத்தில் பணியில் சேர இருப்பது குறிப்பிடத்தக்கது.

தன்மே பக்க்ஷியின் பேட்டி
--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்