Monday 8 January 2018

செய்து பாருங்கள்: ஸ்பின்னர்



தேவையான பொருட்கள்:

அட்டைபெட்டி அட்டை ஒன்று
வெள்ளை நிற சார்ட் ஒன்று
அழுத்தமான ட்வைன் நூல்
கலர் ஸ்கெட்ச் பாக்கெட்
பெவிக்விக் (அ) கோந்து


செய்முறை:  

அட்டைபெட்டி அட்டையில் வட்டமான பொருள் ஒன்றை அளவாக வைத்து ஒரே அளவில் மூன்று அல்லது நான்கு வட்டங்கள் வரைந்து,பின் அந்த வட்ட வடிவங்களை அட்டையில் இருந்து வெட்டி கொள்ளவும்.

வெட்டப்பட்ட வட்ட வடிவ அட்டைகளின் இருபுறமும் ஓட்டுவதற்கு வெள்ளை நிற சார்ட் பேப்பரில் அதே அளவுள்ள வட்ட வடிவங்களை வெட்டி அட்டையின் இருபுறமும் கோந்து கொண்டு ஒட்டி விடவும்.

கலர் ஸ்கெட்ச் கொண்டு வட்ட வடிவ வெள்ளை சார்ட் பேப்பரில் சிறிய (சிறிய புள்ளிகள், வட்டங்கள், சதுரங்கள்) வடிவங்களை வரைந்து வண்ணம் தீட்டவும்.

வண்ணம் தீட்டப்பட்ட வட்ட வடிவ சார்ட் அட்டையின் நடுவில் சிறு இடைவெளியில் இரு துளைகள் இட்டு, துளைகள் வழியாக ட்வைன் நூலை விட்டு முடிச்சு போடவும். 

அழகான வண்ண ஸ்பின்னர் தயார். 


--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்