கூகுள் ஃபார் டூடுல் போட்டியில் பரிசை வென்ற ஏழு வயது மாணவி திவ்யான்ஷி சிங்கால்.
டூடுல் ஃபார் கூகுள் என்ற பெயரில் கூகுள் நிறுவனம் நடத்திய ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான டூடுல் ஓவியம் வரையும் போட்டியில் குருகிராம் பகுதியை சேர்ந்த டெல்லி பப்ளிக் ஸ்கூலில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது மாணவியான திவ்யான்ஷி சிங்கால் தேசிய அளவில் முதல் பரிசை வென்றுள்ளார்.
வாக்கிங் டிரீஸ், அதாவது தமிழில் நடக்கும் மரங்கள் என்ற தலைப்பில் அவர் வரைந்த டூடுல் ஓவியத்திற்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. கோடை விடுமுறைக்கு தனது பாட்டியின் இல்லத்திற்கு சென்ற போது அங்கு அருகில் இருந்த பகுதியிலுள்ள மரங்கள் வெட்டப்படுவதை கண்டு வேதனையடைந்த திவ்யான்ஷி சிங்காலுக்கு ஒருவேளை இந்த மரங்களுக்கு கால்கள் இருந்தால் அவைகள் ஓடிப்போய் தப்பித்துக் கொள்ளும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது. அந்த எண்ணத்தையே டுடுல் போட்டிக்கு ஓவியமாக வரைந்து பரிசை வென்றுள்ளார்.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் கடந்த நவம்பர் பதினாலாம் தேதி குழந்தைகள் தினத்தன்று காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது இந்த காற்று மாசு அதிகரிப்புக்கு காரணம் அதிக அளவில் மரங்கள் வெட்டப்படுவது தான் என்று இந்த சிறுமி சுட்டிக்காட்டுகிறார். ஒரு லட்சத்துக்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் இவர் பரிசை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முந்தைய பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------